பண்டிகைக் காலம் நெருங்கும் வேளையில், தங்கம் மற்றும் வெள்ளி வாங்கத் திட்டமிட்டிருப்பவர்களுக்குச் சாதகமாகச் சந்தை நிலவரம் மாறியுள்ளது. நேற்று ஒரே நாளில் இரண்டு முறை தங்கம் விலை குறைந்ததைத் தொடர்ந்து, இன்றைக்கும் (செப். 29) ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கணிசமாகக் குறைந்து வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய வர்த்தகத் தொடக்கத்தில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.25 சரிந்து ரூ.13,640-க்கும், சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.1,09,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல வெள்ளி விலையிலும் பெரிய அளவிலான வீழ்ச்சி பதிவாகியுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.240 ஆகவும், தொழில்துறைக்கு பயன்படும் கிலோ பார் வெள்ளி ஒரே நாளில் ரூ.5,000 சரிந்து ரூ.2,40,000 ஆகவும் விற்பனையாகிறது.
அடுத்தடுத்து தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்படும் இந்த இறங்குமுகம், சாமானிய மக்களும் இல்லத்தரசிகளும் ஆபரணங்கள் வாங்க நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.



Leave a Reply