கோவை மாவட்டம் கோவில்பாளையம் காவல் நிலையத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் வேல்முருகன், தனது உயிரைப் பொருட்படுத்தாமல் கடத்தல்காரர்களைப் பிடிக்கச் செய்த வீரச் செயல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ராஜஸ்தானைச் சேர்ந்த மூன்று நபர்கள் சுமார் 250 கிலோவிற்கும் அதிகமான குட்கா பொருட்களை SUV காரில் கடத்திச் சென்றுள்ளனர். ரோந்து பணியில் இருந்த காவலர்கள் அவர்களை மறித்தபோது, தப்பிப்பதற்காக காரை வேகமாகச் செலுத்தியுள்ளனர். அப்போது சாதுரியமாகச் செயல்பட்ட தலைமைக் காவலர் வேல்முருகன், காரின் கூரை கம்பிகளைப் (Roof Rails) பிடித்து தொங்கியபடியே சுமார் 40 கிலோமீட்டர் தூரம் பயணித்துள்ளார்!
இறுதியில் கடத்தல்காரர்களை மடக்கிப் பிடிக்கும் வரை அவர் காட்டிய இந்த அசகாய தைரியத்தை NHAI ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வீடியோவாகப் படம்பிடித்துள்ளனர். கடமையின் முன்னே தன் உயிரையும் பொருட்படுத்தாது செயல்பட்ட இந்த துணிச்சலான காவல் அதிகாரியின் வீரச் செயலுக்கு நெட்டிசன்கள் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.



Leave a Reply