தங்க நகைப் பிரியர்களுக்கும் இல்லத்தரசிகளுக்கும் மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் விதமாக, இன்று (செப்டம்பர் 28) தங்கம் மற்றும் வெள்ளி விலையில் அதிரடி சரிவு ஏற்பட்டுள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹235 குறைந்து ₹13,765-க்கு விற்பனையாகிறது. இதன் மூலம் சவரனுக்கு ₹1,880 வரை குறைந்து, ஒரு பவுன் தங்கம் ₹1,10,120 என்ற நிலைக்கு வந்துள்ளது.
தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையும் கணிசமாகக் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ₹5 குறைந்து ₹245-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ₹5,000 சரிந்து ₹2,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் மற்றும் வெள்ளி விலை, பண்டிகை காலத்திற்கு முன்பாகவே பொதுமக்களுக்குப் பெரிய நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தந்துள்ளது.



Leave a Reply