கோ-ஆப்டெக்ஸ் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை: அமைச்சர் ஆர்.காந்தி அறிவுறுத்தல்

Spread the love

கோவை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் கைத்தறி மற்றும் பட்டுத் துணிகளின் விற்பனையை அதிகரிப்பது குறித்து கைத்தறித் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வு மேற்கொண்டார்
கோவை மண்டலத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ், ஹேண்ட்லூம்ஸ் ஆஃப் இந்தியா உள்ளிட்ட விற்பனை நிலையங்களை ஆய்வு செய்த அவர், புதிய வாடிக்கையாளர்களை ஈர்த்தல், சிறப்புத் தள்ளுபடி திட்டங்களை செயல்படுத்துதல், துணிகளின் தரம் மற்றும் வடிவமைப்புகளை மேம்படுத்துதல் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
2026-27-ஆம் ஆண்டில் ரூ.28 கோடி விற்பனை இலக்கும், தீபாவளி விற்பனைக்கு ரூ.10 கோடி இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு 30 சதவீத சிறப்புத் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
ஆய்வின்போது உதவி இயக்குநர் செந்தில்குமார், முதுநிலை மண்டல மேலாளர் பி.அம்சவேணி, மேலாளர் சி.அய்யப்பன், துணை மண்டல மேலாளர் சுலங்கி பிரபா, விற்பனை நிலைய மேலாளர்கள் விஜயநாத், க.செல்வி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.