கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் KASC-கல்வி நிறுவனங்களின் புத்தாக்கக் குழு மற்றும் தமிழ்த்துறை (முதுகலை தமிழ் இலக்கியம்) சார்பில் உலகப் படைப்பாற்றல் மற்றும் புதுமை தினத்தை முன்னிட்டு “படைப்பாற்றல் வெற்றியின் இரகசியம்” எனும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு கல்லூரி வளாகத்தில் (அரங்கம் G5) நடைபெற்றது.
இந்நிகழ்விற்குச் சிறப்பு விருந்தினராக SNMV கலை அறிவியல் கல்லூரியின் தலைமை நூலகர் முனைவர் க. உமாமகேஸ்வரி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், மாணவர்கள் தங்கள் புதிய சிந்தனைகளையும் படைப்பாற்றலையும் மேம்படுத்தி வாழ்வில் எவ்வாறு வெற்றி பெறலாம்என்பது குறித்து சிறப்புரயாற்றினார். KASC-IIC ஒருங்கிணைப்பாளர் முனைவர் பி. திவ்யபிரியா, KASC-IIC குழுச் செயலாளர்களுமான முனைவர் ச. அனிதா சோபியா மார்கிரேட், ம. சேதுமாதவன், தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்கள் மற்றும் திரளான மாணவர்கள் கலந்துகொண்டனர்.
நிறைவாக, நிகழ்வில் நடைபெற்ற ஓவியப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் சிறப்புச் சொற்பொழிவு



Leave a Reply