இதுகுறித்து அவர் கூறியதாவது:
குறுந்தொழில் நிறுவனங்களுக்கு பெரும் சுமையாக உள்ள மின் கட்டணத்தின் நிலைக் கட்டணத்தை பாதியாக குறைக்க வேண்டும் என தமிழக முதல்வரிடம் கடந்த வாரம் நேரில் மனு அளித்தோம். இதுகுறித்து பரிசீலித்து நல்ல அறிவிப்பு வெளியிடுவதாக முதல்வர் உறுதியளித்திருந்த நிலையில், பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது.
நிலை கட்டணம் பாதியாக குறைக்கப்பட்டால் மட்டுமே குறுந்தொழில் நிறுவனங்களுக்கு சாதகமான சூழல் உருவாகும். தமிழகத்தில் புதிதாக 5 தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு சலுகை விலையில் இடம் உள்ளிட்ட வசதிகள் வழங்க வேண்டும்.
மேலும், புதிய தொழில் கொள்கையில் குறுந்தொழில்களுக்கான தனிப்பட்ட சலுகைகள் இடம்பெற வேண்டும். இதற்காக குறுந்தொழில் முனைவோருடன் அரசு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி, அவர்களின் பிரச்னைகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்து கொள்கைகளை வகுக்க வேண்டும்.
குறுந்தொழில் முனைவோருக்கு 6 சதவீத வட்டி மானியத்தில் கடன் வழங்கும் பழைய நடைமுறையை மீண்டும் கொண்டு வர வேண்டும். இதன் மூலம் புதிய தொழிற்சாலைகள் உருவாக வாய்ப்பு ஏற்படும்.
தொழில்துறைக்கு கடந்த பட்ஜெட்டில் வழங்க வேண்டிய கடன் தொகையில் ரூ.100 கோடிக்கும் மேல் நிலுவையில் உள்ள நிலையில், தற்போது ரூ.258 கோடி மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க தமிழக அரசு கூடுதல் நிதி மற்றும் முதலீட்டு மானியங்களை வழங்க வேண்டும்.
தவெக தனது தேர்தல் அறிக்கையில் தொழில்துறையினரின் நிலைக் கட்டணத்தை பாதியாக குறைப்பதாக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், அதுகுறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகாதது வருத்தமளிக்கிறது.
நிலை கட்டணம் தொடர்ந்து அதிகமாக இருந்தால் சிறு தொழில் நிறுவனங்களின் உற்பத்தித் திறன் பாதிக்கப்பட்டு, சில தொழிற்சாலைகள் மூடப்படும் நிலை ஏற்படக்கூடும். எனவே, வரும் காலங்களில் தொழில்துறைக்கு கூடுதல் திட்டங்களை அரசு அறிவிக்க வேண்டும்.
மொத்தத்தில், தமிழக அரசின் முதல் பட்ஜெட் தொழில்துறையினருக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது என்றார்.



Leave a Reply