பீளமேடு டெலிகாம் காலனி பகுதியில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வந்த தேசியப் பறவையான மயில், தெருநாய்கள் துரத்தியதால் மின்மாற்றியில் சிக்கி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீளமேடு டெலிகாம் காலனி குடியிருப்புப் பகுதியில் உணவு, தண்ணீர் தேடி மயில் ஒன்று வந்துள்ளது. அப்போது அங்கு சுற்றித்திரிந்த தெருநாய்கள் திடீரென மயிலைத் துரத்தியதாக கூறப்படுகிறது.
நாய்களிடம் இருந்து தப்பிக்க பறந்த மயில், அங்கிருந்த மின்வாரிய மின்மாற்றியின் மீது சென்று அமர்ந்துள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக மின் கம்பிகளில் சிக்கிய மயில் மீது மின்சாரம் பாய்ந்ததில், தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
தேசியப் பறவையான மயில் உயிரிழந்து கிடந்ததைக் கண்டு அப்பகுதி மக்கள் வேதனை அடைந்தனர். இச்சம்பவம் விலங்குகள் நல ஆர்வலர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



Leave a Reply