கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு ஆற்றில் போதிய நீர்வரத்து இல்லாததால் ஆடி பதினெட்டாம் பெருக்கு விழா வழக்கமான உற்சாகம் இன்றி காணப்பட்டது. இருப்பினும், ஐதீகத்தின்படி பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த பூஜைப் பொருட்களை படித்துறையில் வைத்து, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.
ஆற்றில் தண்ணீர் இல்லாத நிலையில், பக்தர்கள் சடங்குகளை மேற்கொள்ளும் வகையில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குழாய் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
விழாவையொட்டி பக்தர்கள் பயன்படுத்திய பூஜைப் பொருட்கள் மற்றும் கழிவுகளை சுகாதாரப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் உடனுக்குடன் அகற்றி தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
மேலும், பக்தர்கள் அதிக அளவில் திரண்டதால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.



Leave a Reply