தீபாவளி 2026 பண்டிகையை முன்னிட்டு, கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் அரசு சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
திருப்பூர் புஷ்பா தியேட்டர் அருகே கல்லூரி சாலையில் உள்ள மாவட்ட கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் சிறப்பு விற்பனை தொடக்க விழா நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் டாக்டர் மனிஷ் நாரணவரே கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி, முதல் விற்பனையை தொடங்கி வைத்து, புதிய ரகங்களை பார்வையிட்டார்.
தீபாவளி விற்பனையை முன்னிட்டு சிறுமிகளுக்கான பட்டு பாவாடை-சட்டை, புதிய வடிவமைப்புகளில் காட்டன் சேலைகள், நைட்டிகள், ஆண்களுக்கான லினன், ரிங்கிள் ஃப்ரீ மற்றும் ஸ்லிம் ஃபிட் ரெடிமேட் சட்டைகள் உள்ளிட்ட பல்வேறு புதிய ரகங்கள் விற்பனைக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.
அரசு மற்றும் தனியார் நிறுவனப் பணியாளர்களுக்கு கடன் விற்பனை வசதியும், வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஞாயிறு உள்ளிட்ட அனைத்து விடுமுறை நாட்களிலும் விற்பனை நிலையங்கள் செயல்படும் வசதியும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் மற்றும் உடுமலைப்பேட்டை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் ரூ.1.20 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விழாவில் கோ-ஆப்டெக்ஸ் முதுநிலை மண்டல மேலாளர் ப.அம்சவேணி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



Leave a Reply