கோவை சி.எம்.எஸ். சோசியல் வெல்பர் அறக்கட்டளை மற்றும் அனைத்து கிறிஸ்துவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையம் சார்பில், மோசஸ் ஞானபாரணம் கண் மருத்துவமனை, கோயம்புத்தூர் மிட்டவுன் ரோட்டரி சங்கம், ஆலயம் பவுண்டேஷன் மற்றும் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் ஆகியவற்றின் இணைப்பில் மாபெரும் இலவச கண் பரிசோதனை மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சியை ஜெபத்துடன் அருண் தொடங்கி வைத்தார். பங்குத்தந்தை அந்தோணி அகலம் தலைமை வகித்தார். அனைத்து கிறிஸ்துவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையத்தின் தமிழ்நாடு தலைவர் கோவை சி.எம். ஸ்டீபன் முன்னிலை வகித்தார். கிறிஸ்டி மோனிஷா வரவேற்புரை வழங்கினார். லியோ பெர்னாண்டஸ் மற்றும் பிரான்சினா ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
முகாமை திரைப்பட நடிகரும், தயாரிப்பாளரும், சமூக ஆர்வலருமான ஜனங்களின் பிரியன் பிரதீப் ஜோஷ் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். சமூக நலப் பணிகளில் இதுபோன்ற இலவச மருத்துவ முகாம்கள் மக்களுக்கு பெரிதும் பயனளிப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மருத்துவர் மாணிக்கம், ஈரா. புகழேந்தி, சித்தி விநாயகர் கோயில் ரகுநாதன், கோவை மாவட்ட இலவச சட்ட ஆலோசனைக் குழுவின் மாவட்ட செயலாளர் திருமதி ஸ்ரீலதா உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் மற்றும் நல மைய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று இலவச கண் பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர். பரிசோதனையில் கண் கண்ணாடி தேவைப்படுவோர் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு இலவசமாக கண்ணாடிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.



Leave a Reply