துப்பாக்கி முனையில் மிரட்டுகிறார்கள்-மார்க்கண்டேயன்

Spread the love

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயை குறித்து சட்டமன்றத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் இன்று காலை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சர்க்கரை நோய் இருப்பதால் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவர்மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டபோது, போலீசார் தன்னை துப்பாக்கி முனையில் மிரட்டுவதாக மார்க்கண்டேயன் பத்திரிகையாளர்களிடம் கூச்சலிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.