பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழா கோவை வார்டு 44-ல் முன்னாள் மேயர் வெங்கடாசலம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ராமலிங்க நகர் அசோசியேஷன் தலைவர் விஜயராகவன், சலவை காலனி தலைவர் நாகராஜ், பி.வி. கிருஷ்ணன் வீதியைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி சிவக்குமார், சௌந்தர், கனகராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
விழாவை வார்டு 44 கவுன்சிலர் டாக்டர் ஆர். காயத்ரி ஒருங்கிணைத்து நடத்தினார். காமராஜரின் மக்கள் நலப் பணிகளை நினைவுகூரும் வகையில், சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வீட்டு மளிகைப் பொருட்கள், காக்கி பேண்ட் மற்றும் சட்டைகள் வழங்கப்பட்டன. மேலும், அப்பகுதியைச் சேர்ந்த மகளிருக்கு புடவைகளும் வழங்கப்பட்டன. நலத்திட்ட உதவிகளை கவுன்சிலர் டாக்டர் ஆர். காயத்ரி நேரடியாக வழங்கி பயனாளர்களை வாழ்த்தினார்.
இந்நிகழ்வில் மகளிர் தலைவர் பிரபாவதி, ராமலிங்க நகர் குடியிருப்போர் நலச்சங்க செயலாளர் எஸ். ரவிக்குமார், பொருளாளர் ராமச்சந்திரன், குழு உறுப்பினர்கள் ராஜி விஜயன், ஜெயஸ்ரீ ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் கலந்து கொண்டவர்கள் பெருந்தலைவர் காமராஜரின் எளிமை, நேர்மை, மக்கள் சேவை ஆகிய உயரிய பண்புகளை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சி நிறைவில் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.



Leave a Reply