கோவை டாடாபாத் பவர் ஹவுஸ் அருகே நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு சிஐடியு மாவட்ட பொருளாளர் ஆர். வேலுச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி போராட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
போராட்டத்தில் மாநில சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கே. திருச்செல்வம், டாஸ்மாக் ஊழியர்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். இதில் மாவட்ட தலைவர் ஏ. ஜான் அந்தோணி ராஜ், மாவட்ட பொருளாளர் எஸ். ராமகிருஷ்ணன், மாவட்ட நிர்வாகிகள் ஓய். அன்பு, பி. மகேஷ், பி. விஜயராகவன், ஜி. சரவணன், கே. தங்கராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான டாஸ்மாக் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
போராட்டத்தின் போது, மதுபான பாட்டில்களை திரும்பப் பெறுவதற்கான மாற்றுத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
மேலும், டாஸ்மாக் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குதல், இ.எஸ்.ஐ. மருத்துவச் சலுகைகளை உறுதி செய்தல், ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.
தமிழக அரசும் முதலமைச்சரும் நேரடியாக தலையிட்டு, டாஸ்மாக் ஊழியர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
உண்ணாவிரதப் போராட்டத்தில் திரளான டாஸ்மாக் ஊழியர்கள் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.



Leave a Reply