நேரு நகர் லயன்ஸ் கிளப் சார்பில் சிறைக்கைதிகளுக்கு கண் பரிசோதனை முகாம்

Spread the love

இந்திய மருத்துவ சங்கம்,பொன்னம்மாள் துரைசாமி கண் மருத்துவமனை, செந்தமிழ் அறக்கட்டளை, கோவை நேரு நகர் லயன்ஸ் சங்கம் மற்றும் கோவை மத்திய சிறைத்துறை சார்பில் கோவை மத்திய சிறை கைதிகளுக்கு கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.
செந்தமிழ் அறக் கட்டளை நிறுவனர் கனகசுப்பிரமணியனம் , பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் ஜி எம் டி ஒருங்கிணைப்பாளர் லயன் செந்தில் குமார் ஒருங்கிணைப்பில் சிறை கண்கா ணிப்பாளர் செந்தில்குமார் இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் கோசல் ராம்
பன்னாட்டு லயன்ஸ் இயக்க மாவட்ட ஆளுநர் செல்வராஜ் ஆகியோர் கண் பரிசோதனை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
பொன்னம்மாள் துரைசாமி கண் மருத்துவமனை டாக்டர் அனுஷா கோசல்ராம் தலைமையிலான மருத்துவ குழுவினர் 252 சிறை கைதிகளுக்கு கண் பரிசோதனை செய்தனர். தேவைப்பட்ட 165 சிறைவாசிகளுக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டத.
நிகழ்ச்சியில் ஈஷா யோகா மையத்தைச் சார்ந்த மோகன், நேரு நகர் லயன்ஸ் சங்கத் தலைவர் தேஜஸ்வினி, பெண்கள் தின மாவட்ட தலைவர் சுப்பு செந்தில்குமார், பேராசிரியர் கார்த்திக், நேரு நகர் லயன்ஸ் சங்க நிர்வாகி கிரீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.