கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை பதவி உயர்வு பெற்ற ஆய்வக உதவியாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் 5 முக்கிய தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை பதவி உயர்வு பெற்ற ஆய்வக உதவியாளர்கள் சங்கத்தின் மாநிலச் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் திலீப்குமார் தலைமை தாங்கினார்.
இந்த முக்கிய கூட்டத்தில், ஆய்வக உதவியாளர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைதல், பதவி இறக்க நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது மற்றும் விருப்ப மாறுதல் வழங்குவது உள்ளிட்ட 5 முக்கிய தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
தமிழக அரசு ஆய்வக உதவியாளர்களின் இந்த நியாயமான கோரிக்கைகளை உடனடியாக பரிசீலித்து, உரிய அரசாணைகளை விரைந்து வெளியிட வேண்டும் என்பதே இந்த செயற்குழு கூட்டத்தின் பிரதான கோரிக்கையாக முன்வைக்கப்பட்டுள்ளது.இதில் மாநில செயலாளர் சண்முகசுந்தரம், கோவை ஆனந்தி,மாவட்டத் தலைவர் ராமானந்தம், மாவட்டச் செயலாளர் கனகராஜ், சூரி மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



Leave a Reply