கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறையின் மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, இந்திய மோட்டார் விளையாட்டு கழகங்களின் கூட்டமைப்பு வழங்கும் இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் விருதைப் பெற்றுள்ளார்.
பெங்களூருவில் நடைபெற்ற எஃப்எம்எஸ்சிஐ ஆண்டு விருது வழங்கும் விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. டர்ட் பைக் ராலி மோட்டார் விளையாட்டில் வெளிப்படுத்திய சிறப்பான திறமை மற்றும் தொடர்ச்சியான சாதனைகளுக்காக இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.
ஸ்பெயினைச் சேர்ந்த ஹீரோ மோட்டோகிராஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜோர்டி விலடோம்ஸிடம் பயிற்சி பெற்றுள்ள கதிரொளி, கடந்த ஆறு மாதங்களில் இந்தியா முழுவதும் நடைபெற்ற 20-க்கும் மேற்பட்ட தேசிய அளவிலான மோட்டோகிராஸ், சூப்பர்கிராஸ் மற்றும் ராலி ரேசிங் போட்டிகளில் பங்கேற்று சிறப்பாக செயல்பட்டுள்ளார்.
அவரது சாதனைக்கு எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாகம், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.



Leave a Reply