தமிழக மாணவர்களிடையே தமிழ் கலாச்சாரத்தைப் பரப்ப தமிழ் திருவிழா: போகோ சேனல் புதிய முயற்சி

Spread the love

தமிழக மாணவர்களிடையே தமிழ் மொழி, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பரப்பும் நோக்கில், போகோ (POGO) சேனல் ‘தமிழ் திருவிழா’ என்ற பிரத்யேக பள்ளித் தொடர்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரையைச் சேர்ந்த 200 பள்ளிகளில் பயிலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை சென்றடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் உலகத்தைத் தாண்டி, மாணவர்கள் தமிழ் பாரம்பரியத்தை நேரடியாக அனுபவிக்கும் வகையில், சோட்டா பீம், லிட்டில் சிங்கம் மற்றும் சம்பத் ஷம்பத் உள்ளிட்ட பிரபல கார்ட்டூன் கதாபாத்திரங்களுடன் பல்வேறு கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இதில் தமிழ் வடிவில் சைமன் சேஸ் விளையாட்டு, மாறுவேட ரிலே போட்டி, சம்பத் ஷம்பத் கதாபாத்திரத்துடன் வேகப் போட்டி, தமிழ் உணவு, சினிமா மற்றும் கலாச்சாரம் தொடர்பான வினாடி-வினா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

இந்த முயற்சிக்கு பிரிட்டானியா மில்க் பிகிஸ் முதன்மை ஸ்பான்சராகவும், அருண் ஐஸ்கிரீம்ஸ் மற்றும் குளுக்கோவிட்டா குளுக்கோஸ் லாலிபாப் ஆகியவை இணை ஸ்பான்சர்களாகவும் ஆதரவு வழங்குகின்றன.

இது குறித்து வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரியின் விளம்பர வருவாய்த் தலைமை அலுவலர் தனஸ் மேத்தா கூறுகையில், “குழந்தைகளுக்குப் பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரங்கள் மூலம் அவர்களின் சொந்த பாரம்பரியத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வாய்ப்பை இந்த முயற்சி உருவாக்கும்” என்றார்.

சந்தைப்படுத்தல் தலைமை அலுவலர் ஜானவி வியாஸ் கூறுகையில், “விளையாட்டுகள் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் மூலம் மாணவர்கள் தமிழ் கலாச்சாரத்துடன் ஆழமான தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள இந்தத் திட்டம் உதவும்” என்று தெரிவித்தார்.