சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பங்கேற்று, 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் இணைந்து யோகா பயிற்சியில் ஈடுபட்டார். யோகா என்பது ஒரு நாள் நிகழ்வாக இல்லாமல், வாழ்வின் அங்கமாக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் 1,500-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுடன் இணைந்து ஆளுநர் யோகா பயிற்சி மேற்கொண்டார். முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியின் நேரலை ஒளிபரப்பும் காண்பிக்கப்பட்டது.
பின்னர் உரையாற்றிய ஆளுநர், “யோகா என்பது ஆண்டுக்கு ஒரு முறை கடைபிடிக்கும் நிகழ்வு அல்ல; தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதியாக அனைவரும் பின்பற்ற வேண்டிய ஆரோக்கியப் பயிற்சி” என்றார்.
நிகழ்ச்சியின் நிறைவாக சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பல்கலைக்கழக வளாகத்தில் மகிழம் மரக்கன்றை ஆளுநர் நட்டு வைத்தார்.



Leave a Reply