கலைஞரின் 103-வது பிறந்தநாள் விழா கோவையில் திமுகவினர் மரியாதை

Spread the love

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை பீளமேடு அண்ணா நகரில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில், திமுக மாநில தீர்மானக் குழு செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நா. கார்த்திக், கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி புகழ் வணக்கம் செலுத்தினார்.
இதில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் வே. பாலசுப்பிரமணியம், பொதுக்குழு உறுப்பினர் இரா. மணிகண்டன், கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், முன்னாள் மாமன்ற உறுப்பினர் என். கேசவன், வழக்கறிஞர் சரவணன், சி.டி.சி. நடராஜ், பி. மனோகர், சு. தனபால், மில் தண்டபாணி, வி. லட்சுமணன், ஆட்டோ சசி, ஆட்டோ வாசு, புதூர் ரமேஷ்குமார், ஸ்ரீவத்சன், கி. பாலச்சந்திரன், எஸ். கோகுலகண்ணன், பட்டேல், பொன்னுச்சாமி, ராஜேந்திரன், ஜோதி நகர் வெங்கடேஷ், சிவக்குமார், சினேகம் இராமச்சந்திரன், கோவிந்தராஜ், சுரேஷ், ஜவகர், ஜான்சிராணி, பூர்ணிமா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியின் நிறைவாக, பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டு கலைஞரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இ-ந்நிகழ்வில் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.