கோரிக்கை ஏற்று ஈரோடு எம்எல்ஏ-விற்கு கைத்தறி துறையை ஒதுக்கீடு செய்த முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

Spread the love
எல்.ராஜகோபால்

கைத்தறி துறை அமைச்சர் ஒதுக்கீட்டில் கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-க்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என முன்வைத்த கோரிக்கையை ஏற்று ஈரோடு எம்எல்ஏ-விற்கு கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பு ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வரின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு நெசரவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர் சுப்பிரமணியம், மாநில செயலாளர் கந்தவேல் ஆகியோர் கூறும் போது,

தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்து ஜவுளித்துறையில் 1.60 லட்சம் மின் இணைப்புகள் மூலம் 5 லட்சத்தி்ற்கும் மேற்பட்ட விசைத்தறிகள், ஒரு லட்சத்திக்குட்பட்ட கைத்தறிகள் மற்றும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தானியங்கி தறிகள் மூலம் தினமும் இரண்டு கோடி மீட்டருக்கு மேல் துணைிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

கைத்தறி துறைக்கு அமைச்சர் நியமிக்கும் போது கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-க்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழக முதல்வர் விஜய்க்கு கோரிக்கை விடுத்திருந்தோம். அதை ஏற்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியை சேர்ந்த எம்எல்ஏ விஜய பாலாஜி அவர்களை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சராக முதல்வர் நியமனம் செய்துள்ளார்.

இந்நடவடிக்கைக்கு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வரவேற்பதுடன், கோரிக்கையை ஏற்று நடவடிக்கை மேற்கொண்ட தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.  கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சராக பொறுப்பேற்ற விஜய பாலாஜி அவர்களை சென்னையில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து பேசினோம்.

ஜவுளித்துறை வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.