நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைத்திட வேண்டுமென வலியுறுத்தி இடதுசாரி மாணவர் இளைஞர் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அண்மையில் நீட் தேர்வு நடந்து முடிந்த நிலையில் ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்தது தெரியவந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டிக்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன மேலும் நீட் தேர்வை முதன்மையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் பல்வேறு கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக இன்று கோவை ரயில் நிலையம் முன்பு இடதுசாரி மாணவர் இளைஞர் அமைப்புகள் சார்பில் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்திட வேண்டும் தேசிய தேர்வு முகமையை கலைத்திட வேண்டும் 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்திட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் SFI, DYFI, AIYF, AISF அமைப்புகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். மேலும் நீட் தேர்வு என்பது வணிகமாக்கப்பட்டு விட்டது என்றும் குற்றம் சாட்டினர்.
பாஜக பிரமுகர்களால் வினாத்தாள் கசியப்பட்டுள்ளதாகவும் வினாத்தாள் கசிவை தேசிய தேர்வு முகமை ஒப்புக்கொண்ட நிலையில் அந்த முகமையை கலைத்திட வேண்டும் எனவும் வலியுறுத்தினர். மேலும் பல லட்ச ரூபாய்க்கு நீட் தேர்வு வினாத்தாள் விற்பனை செய்யப்பட்டு அது வணிகமாக்கப்பட்டு விட்டதாகவும் குற்றம் சாட்டினர்.



Leave a Reply