தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என வலியுறுத்தி, மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், இயக்கத்தினர் மூவரின் புகைப்படங்களையும் ஏந்தியபடி கோரிக்கை களை முன்வைத்தனர்.பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் மனுவும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட இயக்க நிர்வாகிகள் கூறுகையில், “புரட்சித்தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் ஆட்சி காலத்தில் வெளியிடப் பட்ட அரசாணைப்படி அனைத்து அரசு அலுவலகங்களிலும் தந்தை பெரியார் ஈ.வி.ராமசாமி, சி.நா.அண்ணாதுரை மற்றும் பி.ஆர்.அம்பேத்கர் ஆகியோரின் புகைப் படங்கள் வைக்கப்பட வேண்டும். ஆனால் பல அலுவலகங்களில் இது நடைமுறைப்படுத்தப் படவில்லை,” என்றனர்.
மேலும், பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் அரசு அலுவலகங்களில் இந்த தலைவர்களின் புகைப்படங்கள் வைக்கப்படுவது சமூக நீதி மற்றும் சமத்துவ சிந்தனைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல உதவும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையை முழுமை யாக அமல்படுத்த வேண்டும் என்றும், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இயக்கத்தினர் வலியுறுத்தினர்.தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என வலியுறுத்தி, மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், இயக்கத்தினர் மூவரின் புகைப்படங்களையும் ஏந்தியபடி கோரிக்கை களை முன்வைத்தனர்.பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் மனுவும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட இயக்க நிர்வாகிகள் கூறுகையில், “புரட்சித்தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் ஆட்சி காலத்தில் வெளியிடப் பட்ட அரசாணைப்படி அனைத்து அரசு அலுவலகங்களிலும் தந்தை பெரியார் ஈ.வி.ராமசாமி, சி.நா.அண்ணாதுரை மற்றும் பி.ஆர்.அம்பேத்கர் ஆகியோரின் புகைப் படங்கள் வைக்கப்பட வேண்டும். ஆனால் பல அலுவலகங்களில் இது நடைமுறைப்படுத்தப் படவில்லை,” என்றனர்.
மேலும், பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் அரசு அலுவலகங்களில் இந்த தலைவர்களின் புகைப்படங்கள் வைக்கப்படுவது சமூக நீதி மற்றும் சமத்துவ சிந்தனைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல உதவும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையை முழுமை யாக அமல்படுத்த வேண்டும் என்றும், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இயக்கத்தினர் வலியுறுத்தினர்.
கோவை அரசு அலுவலகங்களில் பெரியார், அண்ணா, அம்பேத்கார் புகைப்படங்கள் வைக்க கோரி ஆர்ப்பாட்டம்

Leave a Reply