ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்

Spread the love

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் மருத்துவமனை வளாகத்தில் கொண்டாடப்பட்டது. வண்ண மயமான பலூன்கள் திறந்த வானில் பறக்கவிடப்பட்டன.
இது செவிலியர் சமூகத்திற்கு மனமார்ந்த நன்றியை செலுத்தும் ஒரு உணர்வுப்பூர்வமான செயலாகும். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக அனைத்து செவிலியர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு பிணியாளர்கள் சேவையில் செவிலியர்கள் ஒவ்வொரு நாளும் வழங்கும் அயராத அர்ப்பணிப்பு மற்றும் சேவையை சிறப்பிப்பதற்காக மருத்துவமனை சார்பாக மனமார்ந்த நன்றியை வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்வில் எஸ்.என்.ஆர் சன்ஸ் சேரிட்டபிள் டிரஸ்டின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன், தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி  டி. மகேஷ்குமார், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் எஸ். ராஜகோபால் மற்றும் மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் எஸ். அழகப்பன் ஆகியோர் இந்நிகழ்வை சிறப்பித்தனர்.
மருத்துவமனையின் அனைத்து பணியாளர்களும், செவிலியர் துறையினர் அனைவருக்கும் மன மார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தனர். தரமான சுகாதாரத்தின் தூண்கள் செவிலியர்கள், பராமரிப்பு மற்றும் தொழில்முறை வளர்ச்சி ஆகியவற்றை வளர்க்கும்  நோக்கத்தில் மருத்துவமனைக்கு உறுதியான அர்ப்பணிப்பை அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, பிணியாளர்களின் சேவையில் சிறந்து விளங்குவதிலும், அதை சாத்தியமாக்கும் மருத்துவ வல்லுநர்களை போற்றுவதிலும் மேன்மையாக திகழ்கிறது.
சர்வதேச செவிலியர் தினத்தில், மருத்துவமனையின் அனைத்து செவிலியர் களுக்கும் உயரிய மரியாதையையும் சமுதாயத்திற்கு அவர்கள் வழங்கும்   அர்ப்பணிப்பான பங்களிப்பையும் பெருமையோடு நினைவு கூர்கிறது.