கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி. அருண்குமார், செங்காளிபாளையம், காந்தி காலனி, பாலாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.
முன்னதாக, செங்காளிபாளையம் பட்டத்து அரசி அம்மன் கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்தார். அப்போது பெண்கள் ஆரத்தி எடுத்து, மலர்கள் தூவி, மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் பொது மக்களிடம் பேசிய அவர், அதிமுக மற்றும் மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை இப்பகுதிக்கு கொண்டு வர உறுதுணையாக இருப்பேன் என்று தெரிவித்தார்.
“அனைவருக்கும் வீடு” திட்டத்தின் கீழ், கிராமப் பகுதிகளில் நிலம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்றும், நகரப் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
மேலும், வேலை வாய்ப்பு திட்ட நாட்கள் உயர்த்துதல், எரிவாயு சிலிண்டர் உதவி, குடும்ப அட்டைகளுக்கு நிதியுதவி, வரி உயர்வால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளையும் அவர் எடுத்துரைத்தார்.
“இந்த அனைத்து திட்டங்களும் செயல்பட, மக்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.
செங்காளிபாளையம் பகுதியில் பி.ஆர்.ஜி.அருண்குமார் தீவிர பிரச்சாரம்



Leave a Reply