கோவை மக்கள் எதிர்பார்க்கும் வளர்ச்சி திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்றும், 2026ஆம் ஆண்டில் உதயசூரியன் சின்னம் வெற்றி பெறும் எனவும் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய செந்தில்பாலாஜி, கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தின் 10 தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், மொத்தம் 234 தொகுதிகளிலும் மக்கள் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னெடுத்து வருகிறார் என்றார்.
கோவையில் பம்பு செட் உற்பத்தியாளர்கள், தொழில்துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை அரசு கவனத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார். கோவையின் தொழில் வளர்ச்சிக்காக மத்தியிலும் மாநிலத்திலும் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், கோவையில் ரூ.8,200 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த தேர்தலிலும் கோவை மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னம் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
கோவையில் கூட்டம் நடத்தும் பிரச்சாரத்தின் போது சிலர் கருப்பு சட்டைகள் அணிந்து கற்களை வீசி செல்லுகிறார்கள் என்ற குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்தார். இதுபோன்ற செயல்கள் ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல என்றும் கூறினார்.
கோவை மக்களின் வளர்ச்சிக்காக பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். விமான நிலைய விரிவாக்கம், மேம்பாலங்கள், தொழில் வளர்ச்சி திட்டங்கள் போன்ற பல்வேறு பணிகள் மாநில அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் யாராவது வேண்டுமென்றே அரசை விமர்சித்தாலும், மக்கள் உண்மையை புரிந்துகொண்டு திமுகவுக்கு ஆதரவு வழங்குவார்கள் என்றார். கோவை மாவட்ட மக்களிடம் நம்பிக்கை உள்ளது என்றும், மக்கள் திமுகவுக்கு வாக்களிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் 80 அடி சாலையில் மக்களை சந்தித்து செந்தில்பாலாஜி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.



Leave a Reply