ஈகை திருநாள் எனப்படும் ரம்ஜான் பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை போத்தனூரில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
மஜீத்துல் சுன்னத் ஜமாத் மற்றும் ஹிதயத்துல் இஸ்லாம் சுன்னத் ஜமாத் சார்பில் நடைபெற்ற இந்த தொழுகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். புத்தாடைகள் அணிந்து வந்த பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
தொழுகைக்கு பின், ஒருவருக்கொருவர் கட்டியணைத்து ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். மகிழ்ச்சி, ஒற்றுமை மற்றும் பக்தி உணர்வை வெளிப்படுத்தும் வகையில் விழா கொண்டாடப்பட்டது.



Leave a Reply