தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினரான ஜே. முகமது ரஃபி வெளியிட்டுள்ள ரம்ஜான் வாழ்த்தில் கூறியிருப்பதாவது, ” உலகில் வாழும் அனைத்து இஸ்லாமிய மக்களுக்கும் ஈதுல் பித்ர் என்னும் ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இறைவனின் கட்டளையை ஏற்று பகலெல்லாம் பசித்திருந்து, இரவெல்லாம் விழித்திருந்து இறைவனை நின்று வணங்கி, ஏழ்மை இல்லா உலகத்தை உருவாக்க ஜக்காத் என்னும் ஏழை வரியை இல்லாதோர்க்கு வழங்கி, மகிழ்ச்சியுடன் ரம்ஜான் பெருநாளை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர – சகோதரிகளுக்கு ரம்ஜான் பெருநாள் நல்வாழ்த்துகள். இப்பெருநாளில் அனைவரும் பிரார்த்தனை செய்வோம். அமைதியான உலகம் வேண்டும். அன்பான உலகம் வேண்டும். சமாதானமான உலகம் வேண்டும். ஏழ்மை இல்லாத உலகம் வேண்டும் . போர் இல்லாத உலகம் வேண்டும். அனைவருக்கும் ரம்ஜான் பெருநாள் வாழ்த்துகள். நம் அனைவரின் மீதும் சாந்தியும், சமாதானமும் நின்று நிலவட்டுமாக. சமாதானமே சுக வாழ்வு!”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகமது ரஃபி ரம்ஜான் வாழ்த்து



Leave a Reply