தென்னிந்தியாவின் “மான்செஸ்டர்” என அழைக்கப்படும் கோவையில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வெளியூர்களிலிருந்து வந்து தங்கி பணியாற்றி வருகின்றனர். இதனால் காந்திபுரம் பகுதியில் உள்ள முக்கியப் பேருந்து நிலையங்களில் எப்போதும் மக்கள் நெரிசல் காணப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மாலை பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியில் ஒருவர் மது போதையில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். இதனை கவனித்த இரண்டு வாலிபர்கள், அவரின் அருகில் அமர்ந்து சூழ்நிலையை ஆராய்ந்தனர்.
யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்த பின்னர், அவர்கள் மிகவும் நைசாக உறங்கிக் கொண்டிருந்த நபரின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் மற்றும் பணத்தை திருடிச் சென்றனர். சம்பவம் நடந்ததும், இருவரும் அங்கிருந்து எளிதாக தப்பிச் சென்றனர்.
இந்தச் சம்பவத்தை அங்கு இருந்த ஒரு கல்லூரி மாணவி தனது செல்போனில் ரகசியமாக பதிவு செய்துள்ளார். “அவர்களை அங்கேயே எதிர்கொண்டால் எனக்கு ஆபத்து ஏற்படும் என நினைத்து, ஆதாரமாக வீடியோ எடுத்தேன்” என அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Leave a Reply