கோவை அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் வாகனங்கள் அதிகளவில் சென்று வரும் நிலையில், அங்கு நடந்த விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ஒரு வயதான மூதாட்டி மேம்பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்தார். அப்போது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம், அந்த மூதாட்டி மீது மோதியது. மோதிய வாகன ஓட்டுநர் நிற்காமல் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த விபத்து சம்பவம் பின்னால் வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கருவியில் பதிவாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த மூதாட்டி உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து பந்தய சாலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, மோதிவிட்டு தப்பியோடிய இருசக்கர வாகன ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
மேலும், காயமடைந்த அந்த முதிய பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தகவல் வெளியாகியுள்ளது.



Leave a Reply