கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, திமுக பெரியகடை வீதி பகுதி செயலாளர், வட்ட செயலாளர்கள், பகுதி நிர்வாகிகள், பூத் பொறுப்பாளர்கள் கூட்டம், பூ மார்க்கெட் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது.
கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். தெற்கு சட்டமன்ற தொகுதி பார்வையாளர், மாநில விவசாயத் தொழிலாளர் அணி இணைச் செயலாளர் ப.கைலாசம் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினார்.
இந்த கூட்டத்தில் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ், பெரிய கடைவீதி பகுதி -1 செயலாளர் மார்க்கெட் எம்.மனோகரன், தீர்மானக் குழு உறுப்பினர் மு.இரா.செல்வராஜ், தொழிலாளர் அணி துணைச் செயலாளர் எல்.பி.எஃப்.தமிழ்ச் செல்வன், அணிகளின் தலைவர்கள் அமைப்பாளர்கள் ஆ.கண்ணன்,வடகோவை ஜார்ஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திமுக பூத் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை வழங்கிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக்

Leave a Reply