கோவை காந்திபுரத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவிற்கு விடுமுறை நாளான நேற்று 27450 பேர் வருகை புரிந்தனர் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
45 ஏக்கரில் ரூபாய் 208 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவில் 23 வகையான தோட்டங்கள் உள்ளன. கடந்த 11 ஆம் தேதி முதல் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டுள்ள பூங்கா, காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படுகிறது.
அதிக கூட்டம் காரணமாக வாகன நிறுத்தம் நிரம்பி, சிறைச்சாலை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முதல் வார இறுதி நாட்களில் மக்கள் வருகை அதிகரித்ததால், செம்மொழிப் பூங்கா கோவை மக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக மாறியுள்ளது.



Leave a Reply