கோவையில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததில் முன்னாள் அமைச்சர் மற்றும் அதிமுக தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி. வேலுமணி மனிதநேய பணிக்காக பாராட்டு பெற்றுள்ளார்.
கோவைப்புதூரைச் சேர்ந்த சூரியநாராயணன் மற்றும் அவரது மகன் ஆகாஷ் ஆகியோர் கோவையில் தங்களது பணிகளை முடித்து, இரவு புட்டுவிக்கி சாலை வழியாக வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த தனியார் கால் டாக்சி வாகனம் எதிர்பாராத விதமாக அவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தை மோதியது.
இந்த விபத்தில் சூரியநாராயணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் இருந்த மகன் ஆகாஷ் பலத்த காயங்களுடன் எலும்பு முறிவு அடைந்தார்.
விபத்து தகவல் அறிந்த உடனே முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காயமடைந்தவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், விபத்து தொடர்பாக அங்கு பணியாற்றிய காவல்துறையினரிடம் விசாரித்து தேவையான உதவிகளை வழங்கினார்.



Leave a Reply