தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கோவை அவினாசி சாலையில் புதிய உயர்மட்ட மேம்பாலத்திற்கு ஜி.டி. நாயுடு அவர்களின் பெயரை சூட்டப்போகிறார் என்று அறிவித்தார். இந்த மேம்பாலத்தை நாளை மறுநாள் பொதுப் பயன்பாட்டுக்குத் திறக்கவிருக்கிறார்.
முதலமைச்சர் கூறியதாவது, 2020-இல் அறிவிக்கப்பட்ட இந்த மேம்பால பணிகள் 2021 மே மாதம் வரை 5% மட்டுமே முடிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய திராவிட மாடல் அரசு பொறுப்பேற்று ரூ.1,791 கோடி செலவில் 10.10 கி.மீ நீளமுள்ள பாலத்தின் மீதமிருந்த 95% பணிகளை விரைந்து முடித்துள்ளது.
கோவை மக்களின் நீண்டநாள் கோரிக்கையான இந்த ‘அவினாசி சாலை உயர்மட்ட மேம்பாலம்’ கோவை மக்களுக்கு புதிய வசதியை வழங்கும். கோவை என்றால் புதுமை என்பதற்கேற்ப, இந்தியாவின் எடிசன் மற்றும் தந்தை பெரியாரின் உற்ற கொள்கைத் தோழர் ஜி.டி.நாயுடு அவர்களின் பெயரை மேம்பாலத்துக்கு சூட்டியதில் பெருமை என்கிறார் முதல்வர் ஸ்டாலின்.



Leave a Reply