முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணியின் வழிகாட்டுதலின் பேரில் கோவை மாநகர மாவட்டம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் கோவை நஞ்சுண்டாபுரம் மாரியம்மன் கோவில் வீதியில் வசிக்கும் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக புதிய நியாய விலை கட்டிடத்தை அதிமுக அம்மா பேரவை இணை செயலாளரும், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஆர்.ஜெயராம் மக்களின் பயன்பாட்டிற்காக ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அப்பகுதியை சேர்ந்த மக்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தார். இந்த நிகழ்ச்சியில் நஞ்சுண்டாபுரம் பகுதி செயலாளர் சாரமேடு சந்திரசேகர், வார்டு செயலாளர் முருகனாதன், குமாரவேல், செல்வராஜ், சண்முக சுந்தரம், முகமது நசீர், சாரமேடு பெருமாள், உட்ப்பட கழகத்தின் முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடையை திறந்து வைத்தார் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம்



Leave a Reply