தனித்துப் போட்டியிடும் விஜய்க்கு all the best கூறிய  திமுக எம்.பி. கனிமொழி 

Spread the love

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியில் நடைபெற்ற திமுகவின் ஓரணியில் உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்து, அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்.பி. கனிமொழி, தமிழ் மாநிலக் கட்சிகள் மற்றும் நடிகர் விஜய் தலைமையிலான தளபதி மக்கள் இயக்கம் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தார்.

அதில், “பா.ஜ.க.-வுடன் த.வெ.க. கூட்டணி இல்லை என தளபதி மக்கள் இயக்க தலைவர் விஜய் அறிவித்திருப்பது சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், த.வெ.க. தனித்து போட்டியிட்டாலும் திமுகவுக்கு சவாலாக இருக்காது. அதிமுக மற்றும் த.வெ.க. ஒருவருக்கொருவர் சவாலாக இருக்கலாம். தனித்து தேர்தலில் களமிறங்கும் விஜய்க்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்” என கூறினார்.

மேலும், “மக்கள் திமுக மீதும், முதல்வர் மு.க.ஸ்டாலின் மீதும் முழுமையான நம்பிக்கையுடன் இருக்கின்றனர். மக்கள் யாரை எப்படி மதிக்கிறார்கள் என்பதே முக்கியம். யார் நம்பிக்கைக்குரியவர்கள், யார் எதிரிகள் என்பதையும் மக்கள் நன்றாக அறிந்திருக்கின்றனர். எந்தப் பக்கம் யார் சென்றாலும், அவரவர் விருப்பமே அது” எனத் தெரிவித்தார்.

அதிமுகவின் நிலைப்பாடு குறித்து கருத்து கூறிய அவர், “அதிமுகவை யாராலும் கபளீகரம் செய்ய முடியாது என்ற எடப்பாடி பழனிசாமியின் கூற்று, அவருக்கு அருகில் இருப்பவர்களுக்காக கூறியதாகவே இருக்கலாம்” என சுட்டிக்காட்டினார்.