கோவையை சேர்ந்தவர் அமுல்கந்தசாமி. இவர் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வால்பாறை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக உள்ளார்.
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த வேட்பாளரை 13,171 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அமுல்கந்தசாமி வெற்றி பெற்றிருந்தார்.
60 வயதான அமுல் கந்தசாமி உடல்நல குறைவு காரணமாக கோவையில் உள்ள மருத்துவமனையில் கடந்த 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் உடல்நலக் குறைவால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் சிகிச்சை பலனின்றி சற்றுமுன் உயிர் பிரிந்து இயற்கை எய்தினார்.
Leave a Reply