கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் இஸ்ரேலின் ஏரியல் பல்கலைக்கழகம், இஸ்ரேலின் ப்ரோமிட்டி லிமிடெட் ஆகியோருடன் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து 36 மணி நேர இஸ்ரேல்-இந்தியா குளோபல் இன்னோ வேட்டர்ஸ் ஹேக்கத்தான் 2026 நடத்தியது.
2 நாட்கள் நடைபெற்ற இந்த ஹேக்கத்தான் போட்டியில் சைபர் ரேஸிலின்ஸ், சுஸ்தா யினபிலிட்டி இன்ஜினியரிங் ஃபார் பார்மா அண்ட் பையோடெக்னாலஜி, மற்றும் டைவேர்சிபைடு இன்னோவேஷன்ஸ் ஆகிய 3 முக்கியப் பிரிவுகளில் நடைபெறும் இந்த போட்டிகளுக்கு 1,400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 540-க்கும் மேற்பட்ட அணிகளாக பதிவு செய்தன.
பின்னர் நடைபெற்ற தேர்வு செயல் முறைக்குப் பிறகு, 350-க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட 60 அணிகள் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் இறுதி ஹேக்கத்தான் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கான தொடக்கவிழாவில் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக் கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர்.சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசினார். இணை நிர்வாக அறங்காவலர் எஸ். நரேந்திரன், அறங்காவலர் வி.ராமகிருஷ்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஏ. சவுந்தர்ராஜன் விழாவை ஒருங்கிணைத்து அனைவரையும் வரவேற்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் இந்தியா, இஸ்ரேல் மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த புகழ்பெற்ற சர்வதேச நிபுணர்களின் குழுவை சேர்ந்த நடுவர்கள் இஸ்ரேலின் ஈ.ஆர்.ஏ-ஐ.டி.ஏ.-வைச் சேர்ந்த ராமி இட்ஸெலெவ் மற்றும் டேவ் பெலோஸ்டோட்ஸ்கி, இஸ்ரேலின் ப்ரோமிட்டி லிமிடெட் நிறுவனத்தின் மார்க் மெலாமெட், இந்தியாவின் பயோஃ பார்மாக்ஸ் குரூப் லிமிடெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சங்கர் மோகன், பாண்டோமாத் நிதிச் சேவைக் குழுமத்தின் இயக்குநர் டாக்டர் பரம்ஜீத் சிங் மகானி, நெஸ்ட் எக் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஊர்வஷ்க் எஃப். தஸ்தூர், சி.சி.இ-யின் மூத்த ஏஐ விஞ்ஞானி மற்றும் ஆராய்ச்சியாளர் டாக்டர் அர்பித் தீபக் யாதவ், மற்றும் ஐ.எஃப்.ஐ.எம் கல்வி நிறுவனங்களின் டீன் டாக்டர். சலூர் ஸ்ரீகாந்த் பட்நாயக் ஆகியோர் கலந்துக்கொண்டு வாழ்த்துரை வழங்கி பேசினர்.
மேலும் இஸ்ரேலின் ஏரியல் பல்கலைக்கழகத்தின் ரெக்டர் பேராசிரியர்.ஆல்பர்ட் பின்ஹாசோவ் மற்றும் இஸ்ரேலின் புரோமிட்டி லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த லெமுயல் மெலமெட் ஆகியோர் இந்தோ-இஸ்ரேல் கல்வி ஒத்துழைப்பு மற்றும் கண்டுபிடிப்பு சார்ந்த தொழில்முனைவின் முக்கியத்துவம் குறித்து பேசினர்.
தொடர்ந்து நடைபெறும் ஹேக்கத்தான் போட்டியில் நிபுணர் குழுவினர் ஓவ்வொரு குழுவிலும் முதல் 2 இடங்களை தேர்வு செய்து வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் இஸ்ரேல் பல்கலைக்கழகத்துடன் இணைந்து 36 மணி நேர ஹேக்காத்தான்



Leave a Reply