கோயம்புத்தூர் வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் நாளொன்றுக்கு 1,200 டன் கழிவுகளைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் (Waste-to-Energy) 450 கோடியில் ஆலை அமைக்கும் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் எனப் பகுதி பொதுமக்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளன. இந்த ஆலை அமைக்க ஜூலை 31ம் தேதிக்குள் டெண்டர் கேட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, கோவை 47வது வார்டு மாமன்ற உறுப்பினர் பிரபாகரன் முதல்வர் விஜய்க்கு அனுப்பியுள்ள மனுவில், கூறியிருப்பதாவது, ‘‘இந்த திட்டத்தை அமல்படுத்த முந்தைய திமுக ஆட்சியிலேயே அதிமுக எதிர்ப்பு தெரிவித்தோம்.
தற்போது, தவெக அரசு இந்த திட்டத்தை அமல்படுத்த முன்வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
இதற்கு, அதிமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். எனவே, இந்த திட்டத்தை முற்றிலும் கைவிட வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
வெள்ளலூர் குப்பை கிடங்கு மின்உற்பத்தி: முதல்வருக்கு அதிமுக கவுன்சிலர் கோரிக்கை



Leave a Reply