மருத்துவமனையில் வானதி சீனிவாசனை நேரில் சந்தித்த டெல்லி முதல்வர் ரேகா குப்தா

Spread the love

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவருக்கு ஆதரவாக டெல்லி முதல்வர் ரேகா குப்தா இன்று கோவைக்கு வருகை தந்தார்.
வானதி சீனிவாசனின் உடல்நலம் விரைவில் குணமடைய வேண்டும் என்பதற்காக, ரேகா குப்தா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு அர்ச்சனை மற்றும் வழிபாடுகளில் ஈடுபட்டார். அதன் பின்னர், விமானம் மூலம் நேரடியாக கோவை வந்தடைந்த அவர், அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று, தீவிர சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசனை சந்தித்து நலம் விசாரித்தார்.
மருத்துவமனையில் அவருடன் நீண்ட நேரம் பேசிய ரேகா குப்தா,
“உங்களுக்காக திருப்பதியில் அர்ச்சனை செய்து விட்டு நேராக இங்கு வந்துள்ளேன். நீங்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்பதே அனைவரின் பிரார்த்தனை. கவலைப்பட வேண்டாம். உங்கள் சார்பில் நான் கோவை வடக்கு தொகுதியில் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொள்வேன். இந்தத் தேர்தலில் உங்கள் வெற்றி உறுதி,” என ஆறுதல் கூறினார்.
வானதி சீனிவாசன் சிகிச்சையில் இருக்கும் நிலையில், அவரது குடும்பத்தினர் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஏற்கனவே தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், டெல்லி முதல்வரின் இந்த வருகை மற்றும் நேரடி ஆதரவு, பா.ஜ.க தொண்டர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், ரேகா குப்தா இன்று மாலை கோவை வடக்கு தொகுதியில் பல்வேறு பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட உள்ளார்.
ஒரு மாநிலத்தின் முதல்வர், வேட்பாள ருக்காக திருப்பதியில் அர்ச்சனை செய்து விட்டு நேரடியாக வந்து பிரச்சாரத்தில் ஈடுபடுவது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.