மதிமுக முதன்மைச் செயலாளர் பொறு ப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ அறிவித்துள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகனான துரை வைகோ, கட்சியின் முதன்மைச் செயலாளராக நியமிக்க ப்பட்டதிலிருந்து கட்சியில் சில குழப்பங்கள் ஏற்பட்டிருந்தன. முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் பலர் அதற்கெதிராகக் குரல் எழுப்பி, கட்சியிலிருந்து வெளியேறியதும் குறிப்பிடத்தக்கது.
தன்னைப்பற்றிய நீண்ட அறிக்கையை துரை வைகோ தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “நான் ஒரு அரசியல் குடும்பத்தில் பிறந்தவனாக இருந்தாலும், சுய முயற்சியின் வழியே நடந்தவன். 2018ஆம் ஆண்டு என் தந்தை வைகோ உடல்நிலை மோசமடைந்தபோது, அவரைப் பாதுகாப்பதை ஒரு கடமையாகக் கருதி, அவருக்கு முழுமையாக அர்ப்பணித்தேன்,” எனத் தொடங்கி, “தலைமை பதவிக்கு என்னால் ஆசை இல்லாது இருந்தாலும், கட்சிக்காக பணியாற்றுவது என் கடமை என நினைத்தேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் அவதூறு தகவல்களைப் பரப்பி, தலைவருக்கும் கட்சிக்கும் சாயம் படும்படியாக செயல் படுவோர் இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
“நானே முதன்மைச் செயலாளர் பதவியில் தொடர விரும்பவில்லை. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நிர்வாகக் குழு கூட்டத்தில் பங்கேற்பேன். ஆனால், அதன்பிறகு மேற்கொள்ளப்படும் முக்கிய முடிவுகளுக்கான கூட்டங்களில் பங்கேற்க மாட்டேன். எனது முடிவு இயக்கத்திற்கும், தலைவருக்கும் எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாத வகையில் எடுக்கப்பட்டது,” என அவர் தெளிவுபடுத்தினார்.
இனிமேல், தன் னை முதன்மைத் தொண்டனாக கட்சியில் பணி செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும், திருச்சி மக்களால் நாடாளுமன்ற உறுப் பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கா மக்களுக்கு தன்னிலை மறந்த சேவையை வழங்குவதாகவும் உறுதி யளித்தார்.
மேலும், இயக்கத் தொண்டர்களுக்கு உறவாடும் தோழனாகவும், தலைவரை எவ்வித சூழ்நிலையிலும் மனக்கிளர்ச்சி இல்லாமல் பாதுகாக்க வேண்டிய கடமை அனைவருக்கும் இருப்பதாகவும் கூறி யுள்ளார்.
மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து துரை வைகோ விலகினார்

Leave a Reply