பேரூர் படித்துறை புதுப்பிப்பு முதல் குடிநீர் வரை எஸ்.பி.அன்பரசன் முன்னெடுத்த மேம்பாடு

Spread the love

கோவை அருகே உள்ள பேரூரில் புகழ்பெற்ற பட்டீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் நொய்யல் ஆற்றங்கரையில் உள்ள படித்துறையில் போதிய வசதிகள் இல்லாததால், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர்.
இதையடுத்து, பொது மக்கள் மற்றும் பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, கோவை நல்லறம் அறக்கட்டளை தலைவர் எஸ்.பி. அன்பரசன் முன்வந்து நொய்யல் படித்துறையை சீரமைத்து, தர்ப்பண மண்டபத்தையும் அமைத்து கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தார்.
இந்நிலையில், அங்கு வரும் பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் தூய்மையான குடிநீர் வசதி இல்லாததை கவனித்த அவர், உடனடியாக நடவடிக்கை எடுத்தார். இதன் பகுதியாக, மிகவும் நவீன குடிநீர் இயந்திரம் ஒன்றை நிறுவி நேற்று திறந்து வைத்தார்.
இதன்மூலம், நேற்று முதல் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சுத்தமான குடிநீரை எளிதாகப் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சேவையை விரைவாக செய்து கொடுத்ததற்காக, பக்தர்களும் பொதுமக்களும் எஸ்.பி. அன்பரசனை பாராட்டி நன்றி தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் முந்திரி கோபால், மதனகோபால் உள்ளிட்ட நல்லறம் அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.