,

​பழனி கோயில் பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு – இயக்குநர் மோகன் கைது

mohan
Spread the love
​பழனி கோயிலில் வழங்கப்படும் பஞ்சாமிர்தம் குறித்து  அவதூறு பேசியதாக இயக்குநர் மோகனை திருச்சி தனிப்படை போலீசார் ​கைது செய்தனர்.

திரைப்பட இயக்குநர் மோகன் ஜி, தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார். அதில் பேசிய அவர், “நமக்குத் தெரிந்த கோவில் ஒன்றில் பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகள் கலந்து பக்தர்களுக்கு வழங்கப்படுவதாக தான் செவி வழியாக வந்த செய்தியாக கேள்விப்பட்டேன்” என்று பேசியிருந்தார். அவரது இந்த கருத்து சர்ச்சையான நிலையில்,  இயக்குநர் மோகன் ஜி, கைது செய்யப்பட்டுள்ளார்.  சென்னை காசிமேடு இல்லத்தில் வைத்து திருச்சி தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள அவர், திருச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.