தொலைநோக்கு பார்வையால் தொடரும் பாரம்பரியம், நம்பிக்கை –

Spread the love

பாரம்பரிய பட்டாடைகளின் தரம், வாடிக்கையாளர் நம்பிக்கை மற்றும் காலத்திற்கேற்ற நவீன அணுகுமுறை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, ‘ கணபதி சில்க்ஸ்’ 57 ஆண்டுகளாக ஜவுளித்துறையில் தனது பயணத்தைத் தொடர்ந்து வருகிறது.
கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள ‘கணபதி சில்க்ஸ்’ கிளை புதுப்பொலிவுடன் மேம்படுத்தப்பட்ட பார்க்கிங் வசதியுடன் திறக்கப்பட்டது. வாடிக்கையாளர்களின் மனம் கவர எண்ணிலடங்கா ஆடை அணிவகுப்புகள் இடம் பெற்றுள்ளன. கோவையை மையமாகக் கொண்டு தொடங்கிய கணபதி சில்க்ஸ், பல ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் ஆதரவுடன் படிப்படியாக வளர்ச்சியடைந்து, பல்வேறு பகுதிகளிலும் தனது கிளைகளை விரிவுபடுத்தியுள்ளது. நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அதன் நிறுவனர் தெய்வத்திரு. டி.எம். கணபதி முதலியாரின் தொலைநோக்குப் பார்வையும் உழைப்பும் முக்கிய அடித்தளமாக அமைந்துள்ளது.
2005-ம் ஆண்டு, கோவை ஒப்பணக்கார வீதியில் பட்டு ஆடைகளுக்கென பிரத்யேகமான பிரம்மாண்ட ஷோரூம் உருவாக்கப்பட்டு, ‘ கணபதி சில்க்ஸ்’ என்ற பெயரில் புதிய பரிமாணத்துடன் நிறுவனம் வளர்ச்சி பெற்றது. பின்னர் கோவை மக்களிடம் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, பல்வேறு பகுதிகளிலும் தனது வணிகத்தை விரிவுபடுத்தியது.
2012-ம் ஆண்டு தேனியில் புதிய கிளை தொடங்கப்பட்டது. இதன் மூலம் கோவையைத் தாண்டி தென் தமிழக வாடிக்கையாளர்களுக்கும் கணபதி சில்க்ஸ் தனது சேவையை விரிவுபடுத்தியது.
2015-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி, கோவையில் செயல்பட்டு வந்த இரு கிளைகளும் புதுப்பொலிவுடன் மேம்படுத்தப்பட்டன. வாடிக்கையாளர்களின் தேவை களுக்கு ஏற்ப பல்வேறு வகையான பட்டாடைகள் மற்றும் ஆடைகள் கிடைக்கும் வகையில் விற்பனை மையங்கள் விரிவுபடுத்தப்பட்டன.
2017-ம் ஆண்டு வத்தலகுண்டிலும் புதிய கிளை தொடங்கப்பட்டு, அந்தப் பகுதி மக்களுக்கும் கணபதி சில்க்ஸ் தனது சேவையை கொண்டு சென்றது.கோவையின் முக்கிய வணிகப் பகுதியான கிராஸ்கட் ரோட்டில் 2020-ம் ஆண்டு நவீன வசதிகளுடன் பிரம்மாண்டமான ஷோரூம் அமைக்கப்பட்டது. கணபதி சில்க்ஸின் வளர்ச்சிப் பயணத்தில் மற்றொரு முக்கிய மைல்கல்லாக 2024-ம் ஆண்டு கேரள மாநிலம் பாலக்காட்டில் புதிய கிளை தொடங்கப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தைத் தாண்டி கேரளாவிலும் தனது வணிகப் பயணத்தை நிறுவனம் விரிவுபடுத்தியது.57 ஆண்டுகளாக தரம், பாரம்பரியம், வாடிக்கையாளர் நம்பிக்கை ஆகியவற்றை முன்னிறுத்தி செயல்பட்டு வரும் கணபதி சில்க்ஸ்**, தலைமுறைகள் கடந்தும் வாடிக்கையாளர்களின் ஆதரவைப் பெற்று தொடர்ந்து வளர்ந்து வருகிறது. பாரம்பரிய பட்டாடைகளின் சிறப்பையும், நவீன தலைமுறையின் விருப்பங்களையும் இணைத்து, ஜவுளித்துறையில் தனது பயணத்தை ‘ கணபதி சில்க்ஸ்’ தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *