தி.மு.க-வின் கரூர் கும்பல் அராஜகம் அதிமுக பெண் நிர்வாகி மீது தாக்குதல் முயற்சி

Spread the love

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கு ட்பட்ட ராமநாதபுரம் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது தி.மு.க மற்றும் அ.தி.மு.க தொண்டர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
பங்கஜா மில் பின்புறம் உள்ள பெரியார் நகர் பகுதியில், அ.தி.மு.க வேட்பாளர் அம்மன் அர்ஜுனனை ஆதரித்து நடிகர் ரவி மரியா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது, தி.மு.க கவுன்சிலர் ஜெயப்பிரதாவின் கணவர் சீனிவாசன், முதலமைச்சர் அறிவித்ததாகக் கூறி 8,000 ரூபாய் மதிப்பிலான கூப்பன்களை வீடு வீடாக வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனை அ.தி.மு.க பெண் நிர்வாகி ரம்யா தடுத்து நிறுத்த முயன்றதில் வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் அது மோதலாக மாறியது. கூப்பன்களை பறிக்க முயன்றதாக கூறப்படும் நிலையில், வெளிநகரில் இருந்து வந்ததாக கூறப்படும் தி.மு.க ஆதரவாளர்கள் அங்கு வந்து ரம்யாவை மிரட்டியதாக தகவல்.
அவர் தனது காரில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றபோதும், பங்கஜா மில் சாலை மற்றும் கே.ஆர். பேக்கரி அருகே காரை வழிமறித்து தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.
இந்த தகவலை அறிந்த அ.தி.மு.க தொண்டர்கள் திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினரும் நேருக்கு நேர் மோதியதில், சூழ்நிலை தீவிரமடைந்தது. ஒரு கட்டத்தில் உள்ளூர் தி.மு.க தொண்டர்களும் வெளியூர் ஆதரவாளர்களும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த மோதலில் சிலர் காயமடைந்ததாகவும், உடை சேதங்கள் ஏற்பட்டதாகவும் தகவல். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நிலைமையை கட்டுப்படுத்தி, இரு தரப்பினரையும் கலைத்தனர்.
“வெளியூர் நபர்கள் வந்து சட்டம் ஒழுங்கை குலைப்பதை அனுமதிக்க முடியாது” என அ.தி.மு.க தொண்டர்கள் முழக்கமிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.