,

டாஸ்மார்க் ஊழலுக்குத் தண்டனை நிச்சயம் – அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார்

Spread the love

கோவை அதிமுகவின் கோட்டை. வானதி சீனிவாசனின் கேள்விக்கு பதிலளிக்க முடியாத நிலைதான் திமுக அரசின் நிலையைக் காட்டுகிறது. தமிழகத்தில் போதை பொருள் விற்பனை அதிகரித்துள்ளது. ஆட்சி வருவதற்கு முன் திமுக எந்த பெரிய திட்டத்தையும் கோவைக்கு கொண்டு வரவில்லை. திமுக அரசு ஊழலை வளர்த்திருக்கிறது. டாஸ்மார்க் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் விரைவில் சிறையில் முடிவது உறுதி. அதிமுக ஆட்சிக்காக மக்கள் காத்திருக்கிறார்கள். இந்தத் தேர்தல், குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக இருக்க வேண்டும்.

புதிய அரசு கல்லூரிகளுக்கு முதல்வர்கள் இல்லை; 4.6 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. திமுகவில் அமைச்சராக இருக்க மாதம் கப்பம் கட்ட வேண்டும் என்பது நிலைமை. தேர்தலில் தெரு விளக்குகளை அணைக்கும் அளவிற்கு பயப்படுகிறார்கள்.

இது நமது வெற்றியின் அறிகுறி. 2026-இல் வெற்றி உறுதி. வீறு கொண்டு எழுவோம்; வீழ்ந்த தமிழகத்தை மீட்போம்,” என்றார்.