இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களிலும் மக்களுக்குத் தேவையான அங்கன்வாடி மையங்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், ஏ.ஆர். மற்றும் ஜி.ஆர். மையங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் ரூ.10.69 கோடி மதிப்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் நேரு ஸ்டேடியம் அருகே வாலிபால், கபடி, இறகுப்பந்து மற்றும் வுஷூ விளையாட்டுகளுக்கான மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இன்று மட்டும் மொத்தம் 14 புதிய மையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
சின்னவேடம்பட்டி பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அந்தத் திட்டத்தின் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
‘ஜனநாயகன்’ திரைப்படம் பார்த்தபோது அழுதது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “நாங்களும் மனிதர்கள்தான். அமைச்சர் பதவியில் இருந்தாலும், இரண்டு மாதங்களுக்கு முன்புவரை உங்களைப் போலவே சாதாரண ரசிகர்களாக இருந்தோம். எங்களுக்கும் உணர்ச்சிகள் உள்ளன.
கடந்த 30 ஆண்டுகளாக ரசிகனாக அவரை பெரிய திரையில் ரசித்து வந்தோம். இனி அவரை அந்த வகையில் பார்க்க முடியாது என்ற ஏக்கத்தால் எங்களை அறியாமலேயே உணர்ச்சிவசப்பட்டோம். அதை கட்டுப்படுத்த முயன்றாலும் முடியவில்லை. அதில் நானும் ஒருவன்.
அதை அரசியலாக்க வேண்டிய அவசியம் தவெகவுக்கு இல்லை. மக்கள் பணியே எங்களின் அடையாளமாக இருக்கட்டும். மேலும், அந்தக் கண்ணீர் எங்களின் தனிப்பட்ட உணர்வாக, திரையரங்குக்குள் வெளிப்பட்டதுதான்,” என்றார்.



Leave a Reply