கோவை புதூர் பகுதியில் மரங்கள் மற்றும் புதர்கள் நிறைந்த இடத்தில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அரை நிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மரணம் தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாநகர் புதூர் பகுதியில் உள்ள சி.பி.எம். கல்லூரி அருகே, மரங்கள் மற்றும் புதர்கள் அடர்ந்த பகுதியில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அரை நிர்வாண நிலையில் உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலறிந்த குனியமுத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பெண்ணின் சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த பெண் யார், அவரது மரணத்திற்கு காரணம் என்ன, இது கொலையா அல்லது வேறு காரணமா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.



Leave a Reply