கோவை மாவட்டத்தில் இருக்கும் மேட்டுப்பாளையத்தில் உள்ள தாசம்பாளையத்தை சேர்ந்த நாட்டுப்புற நடன கலைஞரான 87 வயது முதியவர் பத்திரப்பன்.
இவர் தமிழகத்தின் பாரம்பரிய கிராமிய நடன கலையான வள்ளி கும்மி ஆட்ட ஆசானாக உள்ளார். அழிந்து வரும் இந்த நடன கலையை இன்றைய தலைமுறையிடம் கொண்டு சேர்க்கும் விதமாக பலருக்கும் இதனை தொடர்ந்து கற்று தருகிறார்.
இவரிடம் பயின்ற பலரும் வள்ளி கும்மி நடன கலைஞர்களாக தற்போது இருந்து வருகின்றனர். தள்ளாத வயதிலும் தளராமல் இந்த கிராமிய கலையை தொடர்ந்து ஊக்குவித்து வந்த பத்திரப்பனுக்கு தற்போது மத்திய அரசு சார்பில் பத்மஶ்ரீ விருது அறிவித்து அவரை கவுரவப்படுத்தி உள்ளது.
இந்த தகவல் கிடைக்கப்பெற்றதுடன் கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தாசம்பாளையம் பகுதியில் உள்ள பத்திரப்பனின் இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிலையில் மக்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கோவை மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் இருப்பதாக சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



Leave a Reply