, ,

கோவையில் பிரதமர் நரேந்திர மோடியின் ரோட் ஷோ – மக்கள் வெள்ளத்தில் பிரதமர் மோடி

pm modi road show
Spread the love

கோவையில் பிரதமர் நரேந்திர மோடியின் ரோட் ஷோ நிகழ்ச்சியில் ​பல்லாயிரக்கணக்கான  மக்கள் கலந்து கொண்டு பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர்.


மாலை சுமார் 5.30 மணி அளவில் தனி விமானம் மூலம் பிரதமர் கோயம்புத்தூர் வந்த​ பிரதமர் மோடி சுமார் 6 மணி அளவில் பேரணி துவங்கும் இடமான சாய்பாபா கோவில் சந்திப்பிற்கு வந்தடைந்தார்.  ​பின்னர் பாஜகவினரின் வரவேற்போடு பேரணி தொடங்கியது. இந்த பேரணியின் போது பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் சாலையின் இருபுறமும் மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.​ மூன்று கிலோமீட்டர் சென்ற பேரணி ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தலைமை தபால் நிலையம் அருகே​ நிறைவுற்றது, 1998 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் குண்டுவெடிப்பின் போது உயிரிழந்த பொதுமக்களுக்கு பிரதமர் ​மோடி மலரஞ்சலி செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், ஏ.பி.முருகானந்தம், ஹெச்.ராஜா, சுதாகர் ரெட்டி, முன்னாள் ​மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், கேசவ விநாயகம் மற்றும் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.