ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, செட்டிபாளையம் அருகில் எல் &டி பைபாஸ் சாலையில் ஜல்லிக்கட்டு திருவிழா நடைபெற உள்ளது. இதனை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த விழாவிற்கு அமைச்சர்.செந்தில் பாலாஜி தலைமையேற்க உள்ளார்.
கோவை மாவட்ட நிர்வாகம், தமிழர் பண்பாட்டுப் பேரவை இணைந்து நடத்தும் மாபெரும் ஜல்லிக்கட்டுத் திருவிழாவை முன்னிட்டு இன்று எல் & டி பைபாஸ் சாலையில், தமிழர் பண்பாட்டு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர், தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் தலைமையில், மாநகர் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா கார்த்திக், வடக்கு மாவட்டச் செயலாளர் தொ.அ.ரவி முன்னிலையில் ஜல்லிக்கட்டு திருவிழா பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் நாக சக்தி பீடம் பாபுஜி சுவாமிகள், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன், திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கோவையில் ஜல்லிக்கட்டு – பணிகளை தொடங்கி வைத்தார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா கார்த்திக்

Leave a Reply